கிருஷ்ணகிரி, பர்கூரில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு
கிருஷ்ணகிரி, பர்கூரில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளையொட்டி, தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி தலைமை தாங்கினார். இதையொட்டி அவர் உறுதிமொழியினை வாசிக்க, அனைத்து துறை அலுவலர்களும் அதனை திரும்ப வாசித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் ஊரக வாழ்வாதார மேம்பாட்டு திட்ட அலுவலர் உமாமகேஸ்வரி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராமமூர்த்தி, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சந்தியா, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சிவசங்கரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அய்யப்பன், செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி சேகர், உதவி செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி மனோஜ்குமார், மாவட்ட கலெக்டர் அலுவலக மேலாளர் தியாகராஜன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
பர்கூர் பேரூராட்சியில் சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாளையொட்டி தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பேரூராட்சி செயல் அலுவலர் மலர் மாறன் தலைமை தாங்கினார். இதையொட்டி அலுவலக பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
இதில், தலைமை எழுத்தர் வெங்கடாசலம், பணி மேற்பார்வையாளர் மகேந்திரன், இளநிலை உதவியாளர் ஜீவானந்தம், சுகாதார மேற்பார்வையாளர் விஜயகுமார் மற்றும் துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story