தீபாவளி பலகாரங்களில் குறை இருந்தால் பொதுமக்கள் புகார் செய்யலாம் கலெக்டர்கள் தகவல்
தீபாவளி பலகாரங்களில் குறை இருந்தால் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அரியலூர்,
தீபாவளி பண்டிகை வருகிற 6-ந் தேதி(செவ்வாய்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதற்காக இனிப்பு மற்றும் கார வகைகளை தயாரிக்கும் அனைத்து நிறுவனங்களும், விற்பனையாளர்களும், தீபாவளி சீட்டு நடத்துபவர்கள் மொத்தமாக இனிப்பு, கார வகைகளை வாங்குபவர்கள் உணவு பாதுகாப்புத் துறையில் பதிவு செய்து உரிமம் பெற்று பொது மக்களுக்கு வினியோகம் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இனிப்பு மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பவர்கள் தரமான மூலப்பொருட்களை கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து பொருட் களை மக்களுக்கு வழங்க வேண்டும். மேலும், பேக்கிங் செய்யப்பட்ட உணவு பொருட் களின் விவர சீட்டில் தயாரிப்பாளர் பெயர், முகவரி, தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி ஆகிய விவரங்களை கட்டாயமாக குறிப்பிட வேண்டும். உணவு தயாரிப்பில் கலப்படமான பொருட்களையோ, அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமான நிறங்களையோ உபயோகிக்கக் கூடாது.
எனவே அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் உணவு பொருட்களை வாங்கும் போது அவற்றில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, தயாரிப்பாளர் விவரம் மற்றும் உணவு பாதுகாப்பு உரிமம் எண் போன்றவற்றை சரிபார்த்து வாங்க வேண்டும். உணவு பொருட்களின் தரம் தொடர்பான குறைகள் இருந்தால் உணவு பாதுகாப்பு துறையின் வாட்ஸ்-அப் எண்ணான 94440 42322 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம்.
மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர்கள் விஜய லட்சுமி (அரியலூர்) , சாந்தா (பெரம்பலூர்) ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story