கிராம நிர்வாக உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்போரூர் தாசில்தார் அலுவலகத்தில் கிராம நிர்வாக உதவியாளர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்போரூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூர் தாசில்தார் அலுவலகத்தில் நேற்று தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம நிர்வாக உதவியாளர்கள் சங்கத்தினர் மாநில பொருளாளர் கோவிந்தராஜன் தலைமையில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அலுவலக உதவியாளர்களுக்கு இணையான ஊதியம் 15,700 வழங்க வேண்டும், காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் போன்று கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் கணக்கீடு செய்து வழங்க வேண்டும் மற்றும் கால முறை ஊதியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வழங்குவது போன்று போனஸ் ரூ.3,500 வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் மாவட்ட செயலாளர் வசந்தகுமார், வட்ட துணைத்தலைவர் ஏழுமலை, பொருளாளர் ஆதிமூலம் மற்றும் பலர் பங்கேற்றனர்.
Related Tags :
Next Story