சேலத்தில் மருந்து கடை ஊழியர் வீட்டில் தங்க காசுகள் திருட்டு


சேலத்தில் மருந்து கடை ஊழியர் வீட்டில் தங்க காசுகள் திருட்டு
x
தினத்தந்தி 1 Nov 2018 3:45 AM IST (Updated: 1 Nov 2018 4:07 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் மருந்து கடை ஊழியர் வீட்டில் 1½ பவுன் தங்க காசுகள் திருட்டு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சூரமங்கலம், 
சேலம் திருவாக்கவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 29). இவர் அங்குள்ள ஒரு மருந்து கடையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 29-ந்தேதி வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றார்.

பின்னர் நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த துணிகள் சிதறி கிடப்பது தெரிந்தது.

மேலும் பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 1½ பவுன் தங்க காசுகள் திருட்டு போய் இருந்தன. இது குறித்து அவர் சூரமங்கலம் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து தங்க காசுகள் திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story