ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி மாணவிகள் தர்ணா


ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி மாணவிகள் தர்ணா
x
தினத்தந்தி 31 Oct 2018 10:59 PM GMT (Updated: 31 Oct 2018 10:59 PM GMT)

தொண்டியில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வலியுறுத்தி பள்ளி மாணவிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தொண்டி,

தொண்டி அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் 450–க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.இதில் 11 மற்றும் 12–ம் வகுப்புகளில் மட்டும் 270–க்கும் மேற்ப ட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.இந்த நிலையில் கடந்த 15நாட்களுக்கு முன்பு இப் பள்ளியில் பணிபுரிந்த தலைமை ஆசிரியர் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் என 7 பேர் பணிமாறுதல் பெற்று சென்று விட்டனர்.

இதனால் இப்பள்ளியில் 11 மற்றும் 12–ம் வகுப்பு மாணவிகளுக்கு தமிழ்,ஆங்கிலம், உயிரியல்,வேதியியல்,இயற்பியல்,கணிதம் போன்ற பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல் லாததால் இப்பள்ளி மாணவிகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து பொதுமக்கள் சார்பில் மாவட்ட கல்வி அதிகாரிகளை நேரில் சந்தித்தும், கோரிக்கை மனுக்கள் அனுப்பியும் உடனே ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந் நிலையில் நேற்று இப்பள்ளியின் மாணவிகள் பள்ளி முன்பு தரையில் அமர்ந்து காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.மாணவிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக தொண்டி மனித நேய ஜனநாயக கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் ஜெய்னுலாபுதீன்,மாவட்ட செயலாளர் முகமது,ஒன்றிய செயலாளர் ஷாஜஹான்,நகர செயலாளர் சிக்கந்தர் மற்றும் பெற்றோர்கள், பொதுமக்கள் ஏராள மானோர் கலந்துகொண்டு மாணவிகளின் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.

இதுபற்றி தகவல் அறிந்த மாவட்ட கல்வி அலுவலர் பிரேம்,தாசில்தார் சாந்தி, பேரூராட்சி செயல் அலுவலர் மாலதி,போலீஸ் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி,சப்–இன் ஸ்பெக்டர் சிலைமணி, பாண்டியன் மற்றும் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட மனித நேய ஜனநாயக கட்சியினர்,மாணவிகள் மற்றும் பெற்றோர்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது அதிகாரிகள் இப்பள்ளியில் காலியாக உள்ள அனைத்து பாடங்களுக்கும் 8 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுஉள்ளது.எனவும் போராட்ட த்தை கைவிட வேண்டும் எனவும் கேட்டு கொண்டனர்.அப்போது பெற்றோர்கள் சார்பில் இப்பள்ளியில் பெண் ஆசிரியர்களை மட்டுமே நியமிக்க வேண்டும், மாணவிகளுக்கு இதுநாள் வரை வழங்கவேண்டிய பாடப் புத்தகங்கள் வழங்கப்படவி ல்லை.கழிப்பறை பயன்படுத்த தண்ணீர் வசதியில்லை,கழிப்பறைகள் சுத்தம் செய்ய பணியாளர் இல்லை இதனால் இங்கு படிக்கும் மாணவிகள் பெரிதும் சிரமப்பட்டு வ ருகின்றனர்.

எனவே அதனை உடனடியாக சரிசெய்து தரவேண்டும் என்றும் வலியுறுத் தினர்.அதற்கு அதிகாரிகள் பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தரு வதாக உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்து மாணவிகள் கலைந்து வகுப்புகளுக்கு சென்றனர்.சுமார் 6 மணி நேரம் நடைபெற்ற இப்போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இதனையொட்டி திரு வாடானை போலீஸ் துணை சூப்பிரண்டு விஜய்குமார் உத்தரவின் பேரில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story