வாடிக்கையாளர்கள் பெயரில் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.13½ கோடி கடன் வாங்கி மோசடி
வாடிக்கையாளர்கள் பெயரில் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.13½ கோடி வீட்டுக்கடன் வாங்கி மோசடி செய்த கட்டுமான நிறுவன இயக்குனர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
மும்பையில் உள்ள ஒரு கட்டுமான நிறுவனம் ஒன்று ராய்காட் மாவட்டம் கர்ஜத்தில் அடுக்குமாடி கட்டிடம் கட்டப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டது. இதைத்தொடர்ந்து அந்த அடுக்குமாடி கட்டிடத்தில் வீடு வாங்குவதற்காக 134 வாடிக்கையாளர்கள் பதிவு செய்தனர். ஆனால், அந்த கட்டுமான நிறுவனம் வாடிக்கையாளர்கள் பெயரில் போலி ஆவணங்களை தயார் செய்து தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் ரூ.13 கோடியே 50 லட்சம் வரை கடனாக வாங்கியுள்ளது.
இந்த நிலையில் நிதி நிறுவனத்துக்கு வாடிக்கையாளர்கள் யாரும் கடனுக்கான தவணை தொகையை செலுத்தவில்லை. இதனால் சந்தேகமடைந்த அந்த நிறுவனம் இதுகுறித்து விசாரணை நடத்தியது. அப்போது, கட்டுமான நிறுவனம் யாருக்கும் வீடு வழங்கவில்லை என்பதும், போலி ஆவணங்களை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் பெயரில் கடன் தொகையை பெற்றிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதுபற்றி அந்த நிறுவனம் சார்பில் தாதர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த கட்டுமான நிறுவன இயக்குனர்களான மினல் உம்ரானியா, வைஷாலா சவல்கர் ஆகியோரை கைது செய்தனர்.
மேலும் இதில் தொடர்புடைய அந்த நிறுவனத்தில் இன்னொரு இயக்குனராக இருக்கும் ஆனந்த் கதம், அவரது மனைவி கவிதா, ஏஜெண்டுகள் சந்தோஷ் விஸ்வகர்மா, தனுஜா விஸ்வகர்மா ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story