புதுச்சேரியில் தேசிய ஒற்றுமை ஓட்டம் கிரண்பெடி –நாராயணசாமி தொடங்கிவைத்தனர்


புதுச்சேரியில் தேசிய ஒற்றுமை ஓட்டம் கிரண்பெடி –நாராயணசாமி தொடங்கிவைத்தனர்
x
தினத்தந்தி 1 Nov 2018 5:42 AM IST (Updated: 1 Nov 2018 5:42 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் நடந்த தேசிய ஒற்றுமை தின ஓட்டத்தை கவர்னர் கிரண்பெடி, முதல்–அமைச்சர் நாராயணசாமி கொடியசைத்து தொடங்கிவைத்தனர்.

புதுச்சேரி,

சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளையொட்டி தேசிய ஒற்றுமை தின ஓட்டம் புதுவை அரசு சார்பில் நேற்று நடந்தது. இதையொட்டி கடற்கரை காந்தி சிலை அருகே வைக்கப்பட்டிருந்த சர்தார் வல்லபாய் படேல் உருவப்படத்துக்கு கவர்னர் கிரண்பெடி, முதல்–அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

பின்னர் தேசிய ஒற்றுமை தின உறுதிமொழியும் எடுத்துக்கொள்ளப்பட்டது. அதைத்தொடர்ந்து தேசிய ஒற்றுமை தின ஓட்டத்தை இருவரும் கொடியசைத்து தொடங்கிவைத்தனர்.

இந்த ஓட்டத்தில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். நகரப்பகுதியினை சுற்றி வந்த இந்த ஓட்டம் மீண்டும் கடற்கரையிலேயே முடிந்தது.

விழாவில் புதுவை அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஜான்குமார், போலீஸ் டி.ஜி.பி. சுந்தரி நந்தா, பள்ளிக்கல்வி இயக்குனர் ருத்ரகவுடு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

விழா முடிந்ததும் கவர்னர் கிரண்பெடி அருகில் உள்ள கவர்னர் மாளிகைக்கு மெதுவாக ஓடியபடியே வந்து சேர்ந்தார். இதை எதிர்பார்க்காத அவரது பாதுகாப்பு அதிகாரிகளும் பின்னால் ஓடி வந்தனர்.

இதேபோல் தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தலைமை செயலாளர் அஸ்வனிகுமார் தலைமையில் அரசு செயலாளர்கள், அதிகரிகள் மற்றும் ஊழியர்கள் தேசிய ஒற்றுமை தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.


Next Story