திருச்செந்தூர் உள்பட 3 இடங்களில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
திருச்செந்தூர் உள்ளிட்ட 3 இடங்களில் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் உள்ளிட்ட 3 இடங்களில் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்திருப்பேரை
வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும். பணிக்கொடை மற்றும் உணவு மானியத்தொகை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சத்துணவு ஊழியர் சங்கத்தினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்திருப்பேரையில் உள்ள ஆழ்வார்திருநகரி யூனியன் அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்க வட்டார தலைவர் சிவஞான கைலாசம், செயலாளர் ஜெயராணி, மாவட்ட துணை தலைவர் ஜேசுமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சாத்தான்குளம்
சாத்தான்குளம் தாலுகா அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்க ஒன்றிய தலைவர் அந்தோணி தமிழ்செல்வன், செயலாளர் முருகன், வட்டார பொருளாளர் தமிழ்செல்வி, ஓய்வூதியர் சங்கம் ஜெயபால், தேவசமாதானம், வருவாய் துறை ஊழியர் சங்கம் சுவாமிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருச்செந்தூர்
திருச்செந்தூர் யூனியன் அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்க ஒன்றிய தலைவர் அரசம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story