நகைக்கடையில் திருடிய பெண் கைது
நகைக்கடையில் திருடிய பெண் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸ்காரரிடம் பிடிபட்டார்.
மும்பை,
மும்பை காட்கோபர் கிழக்கு நாராயண் நகர் பகுதியை சேர்ந்தவர் முகேஷ் சோனி. இவர் அப்பகுதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். கடந்த மாதம் 16-ந் தேதி கடையில் இருந்த போது வாடிக்கையாளராக கடைக்குள் நுழைந்த பெண், நகைகளை வாங்குவது போல் நடித்து அங்கிருந்த 7 கிராம் தங்க நகையை திருடி சென்றார். இதன் மதிப்பு ரூ.21 ஆயிரம் ஆகும்.
இதுபற்றி முகேஷ் சோனி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த அந்த பெண்ணின் உருவத்தை வைத்து அவரை வலைவீசி தேடிவந்தனர்.
இந்த நிலையில், கடந்த 27-ந் தேதி காட்கோபர் போலீஸ் நிலையத்தை சேர்ந்த போலீஸ்காரர் ராஜேஷ் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது மற்றொரு நகைக்கடையில் இருந்து வெளிவந்த அப்பெண்ணை போலீஸ்காரர் அடையாளம் கண்டு மடக்கி பிடித்தார். பின்னர் அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
இதில், அந்த பெண் பன்வெலை சேர்ந்த சுரேகா அவாத் (வயது40) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கோர்ட்டு அந்த பெண்ணை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டது.

Related Tags :
Next Story