விளையாட்டாக வாயில் வைத்த பட்டாசு வெடித்து சிறுவன் பலி
புல்தானா அருகே விளையாட்டாக வாயில் வைத்திருந்தபோது பட்டாசு வெடித்து சிறுவன் பலியானான்.
மும்பை,
தீபாவளி நெருங்கி வரும் நிலையில் மக்கள் மத்தியில் பட்டாசு வெடிக்கும் ஆர்வமும் அதிகரித்து வருகிறது. பட்டாசுகளை சரியாக கையாளாவிட்டால் அது உயிருக்கு உலை வைத்து விடும் என்பதற்கு உதாரணமாக விபரீத சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
புல்தானா மாவட்டம் பிம்பல்காவ் கிராமத்தில் சிறுவர்கள் பட்டாசு வெடித்து விளையாடிக் கொண்டு இருந்தனர். அப்போது சஞ்சய் கவதே (வயது 7) என்ற சிறுவன் வெடிக்காத பட்டாசு என நினைத்து, அதனை விளையாட்டாக வாயில் வைத்து உள்ளான். எதிர்பாராத விதமாக பட்டாசை கடித்து விட்டான். திடீரென பட்டாசு வெடித்து விட்டது.
இதில் அவனது வாய் சிதறி போனது. நிலைகுலைந்து கிடந்த சிறுவனை அங்கிருந்தவர்கள் அருகே உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story