பவானிசாகர் அருகே: மோட்டார்சைக்கிள் திருடிய இலங்கை அகதி கைது
பவானிசாகர் அருகே மோட்டார்சைக்கிள் திருடிய இலங்கை அகதி கைது செய்யப்பட்டார்.
பவானிசாகர்,
பவானிசாகர் அருகே உள்ள அம்மாபாளையத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 36). லாரி டிரைவர். கடந்த 29-ந் தேதி சரவணன் பவானிசாகரில் உள்ள தன்னுடைய நண்பர் ரஞ்சித்குமார் என்பவரை பார்ப்பதற்காக மோட்டார்சைக்கிளில் சென்றார்.
ரஞ்சித்குமார் வீட்டின் அருகே உள்ள ஒரு தண்ணீர் தொட்டியின் கீழ் மோட்டார்சைக்கிளை நிறுத்திவிட்டு வீட்டுக்குள் சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது, மோட்டார்சைக்கிளை காணவில்லை. யாரோ திருடிச்சென்றது தெரிந்தது.
இந்தநிலையில் பவானிசாகர் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த உதயநாயகம் என்பவருடைய மகன் சஞ்சய் என்பவர் சரவணனுடைய மோட்டார்சைக்கிளை வைத்திருப்பது சரவணனுக்கு தகவல் கிடைத்தது. இதுபற்றி அவர் பவானிசாகர் போலீசில் புகார் அளித்தார்.
அதைத்தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் பவானிசாகர் பஸ்நிலையத்தில் நின்றுகொண்டு இருந்த சஞ்சயை பிடித்து விசாரித்தார். அப்போது அவர்தான் சரவணனுடைய மோட்டார்சைக்கிளை சம்பவத்தன்று திருடியது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து சஞ்சையை போலீசார் கைது செய்தார்கள். மோட்டார்சைக் கிளையும் அவரிடம் இருந்து பறிமுதல் செய்தார்கள்.
Related Tags :
Next Story