தனியார் பள்ளி, ஜூனியர் கல்லூரிகள் இன்று மூடல்
மாநில அரசை கண்டித்து தனியார் பள்ளி, ஜூனியர் கல்லூரிகள் இன்று மூடப்படுகிறது.
நாக்பூர்,
மராட்டிய அரசு தவறான கல்வி கொள்கைகளை பின்பற்றி வருவதாக கூறி, அதை கண்டித்து இன்று (வெள்ளிக்கிழமை) தனியார் பள்ளிகள் மற்றும் ஜூனியர் கல்லூரிகள் ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்ய மராட்டிய ராஜ்ய சிக்சான் சன்ஸ்தா மகாமண்டல் அமைப்பு அழைப்பு விடுத்து உள்ளது.
இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான பள்ளிகள் கலந்து கொள்கின்றன. நாக்பூரில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டு இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தற்போது, முதல் பருவ தேர்வு நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story