குன்றத்தூர் அருகே கோவில் குளத்தில் குதித்து பெண் தற்கொலை


குன்றத்தூர் அருகே கோவில் குளத்தில் குதித்து பெண் தற்கொலை
x
தினத்தந்தி 3 Nov 2018 3:45 AM IST (Updated: 2 Nov 2018 11:00 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்டம், குன்றத்தூர் அருகே கோவில் குளத்தில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டனர்.

பூந்தமல்லி,

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூரை அடுத்த தண்டலம், செல்வ விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் சுந்தரவடிவேலு (வயது 60), இவரது மனைவி சாந்தி (50). நேற்று அதிகாலை சுந்தரவடிவேலு தூக்கத்தில் இருந்து எழுந்து பார்த்தபோது மனைவியை காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடினார். அப்போது வீட்டின் அருகில் உள்ள கோவில் குளத்தில் சாந்தி மிதந்து கொண்டிருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சுந்தரவடிவேலு அருகில் உள்ளவர்களை அழைத்து சாந்தியை மீட்டு குரோம்பேட்டையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். பரிசோதனையில் சாந்தி ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீஸ் விசாரணையில் சாந்தி கடந்த சில ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததும் அதன் காரணமாக கோவில் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Next Story