காரிமங்கலம் அருகே கிணற்றில் பெண் பிணம் கொலையா? போலீசார் விசாரணை
காரிமங்கலம் அருகே விவசாய கிணற்றில் பெண் பிணமாக மிதந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரிமங்கலம்,
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியம் கும்பாரஅள்ளியை சேர்ந்தவர் பச்சையப்பன், கூலித்தொழிலாளி. இவர் மனைவி செல்வி (வயது27). இவர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு கவுதமி(7) என்ற மகளும், அன்பரசு(4) என்ற மகனும் உள்ளனர்.
இந்தநிலையில் நேற்று மாலை கும்பாரஅள்ளியை சேர்ந்த பழனி என்பவரது விவசாய கிணற்றில் செல்வி மர்மமான முறையில் பிணமாக மிதந்தார். இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து கிராம நிர்வாக அலுவலர் சிலம்பரசனுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார். பின்னர் இதுகுறித்து அவர் காரிமங்கலம் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் கிணற்றில் பிணமாக மிதந்த செல்வியின் உடலை மேலே கொண்டு வந்தனர். அப்போது அங்கு திரண்டு இருந்த உறவினர்கள் கதறி அழுத சம்பவம் அனைவரையும் கண்கலங்க செய்தது. தொடர்ந்து போலீசார் செல்வியின் உடலை பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஸ்குமார் வழக்குப்பதிவு செய்து, செல்வியை யாரேனும் கொலை செய்து கிணற்றில் வீசினார்களா? அல்லது குடும்ப தகராறு காரணமாக அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story