சீதபற்பநல்லூர் அருகே என்ஜினீயரிங் மாணவர்களுக்கு வேலை வாங்கி தருவதாக ரூ.50 ஆயிரம் மோசடி
சீதபற்பநல்லூர் அருகே என்ஜினீயரிங் மாணவர்களுக்கு வேலை வாங்கி தருவதாக கல்லூரி முதல்வரிடம் ரூ.50 ஆயிரம் மோசடி செய்த மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஆலங்குளம்,
நெல்லை மாவட்டம் சீதபற்பநல்லூர் அருகே தனியார் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் முதல்வராக ராமர் என்பவர் பணியாற்றி வருகிறார். இக்கல்லூரிக்கு மாணவர்களை நேர்முக தேர்வு மூலம் வேலைக்கு எடுப்பதற்காக சென்னை, பெங்களூரு, கோவா, மும்பை போன்ற நகரங்களில் இருந்து ஏராளமான நிறுவனத்தினர் வருகின்றனர்.
கடந்த மே மாதம் செல்லையா என்பவர், தான் சென்னையில் இருந்து வருவதாகவும், சென்னையில் ஒரு பிரபலமான கட்டுமான நிறுவனத்தில் உயர் பதவியில் வேலை செய்வதாகவும் கூறி கல்லூரி முதல்வரிடம் அறிமுகமாகியுள்ளார். மேலும் தங்கள் நிறுவனத்துக்கு மாணவர்களை நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்து அவர்களை பணியமர்த்த வந்துள்ளதாகவும் கல்லூரி முதல்வர் ராமரிடம் தெரிவித்துள்ளார்.
பின்னர் கல்லூரி வளாகத்தின் உள்ளேயே நடந்த எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வில் சிவில் என்ஜினீயரிங் மாணவர்கள் சுமார் 53 பேரை தேர்வு செய்துள்ளார். மேலும் அந்த மாணவர்களை வேலைக்கு அமர்த்த வேண்டும் என்றால், கோவா, திருப்பதி மற்றும் சென்னையில் உள்ள தங்களது நிறுவனத்துக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்வதாகவும், நேர்முக தேர்வில் வெற்றி அடைந்த மாணவர்களை பணியமர்த்த மாணவர் ஒருவருக்கு ரூ.25 ஆயிரம் தர வேண்டும் என்றும் கல்லூரி நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளார்.
இதனை நம்பிய கல்லூரி முதல்வர் ராமர், முன்பணமாக ரூ.50 ஆயிரத்தை வங்கி மூலம் செல்லையாவுக்கு அனுப்பி வைத்துள்ளார். பின்னர் சிறிது நாட்கள் கழித்து செல்லையாவிடம் கேட்டபோது, அவர் காலம் தாழ்த்தி வந்துள்ளார். நாளடைவில் செல்லையாவின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்படவே அந்த நிறுவனம் குறித்து கல்லூரி நிர்வாகத்தினர் விசாரித்துள்ளனர். இதனை தெரிந்து கொண்ட செல்லையா, தன்னுடைய செல்போனை ‘சுவிட்ச்-ஆப்’ செய்துவிட்டு தலைமறைவாகி விட்டார்.
இதுபற்றி நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், கல்லூரி முதல்வர் ராமர் புகார் செய்தார். அதன் பேரில் சீதபற்பநல்லூர் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், சென்னையில் அப்படியொரு நிறுவனமே இல்லை என்பதும், ஏமாற்றிவிட்டு சென்றவரின் பெயர் செல்லையா இல்லை என்பதும் தெரியவந்தது.
இதுகுறித்து சீதபற்பநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர். என்ஜினீயரிங் மாணவர்களுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி கல்லூரி முதல்வரிடமே ரூ.50 ஆயிரம் மோசடி செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story