மாற்றுத்திறனாளிகள் குறை தீர்க்கும் கூட்டம்: 11 பேருக்கு நலத்திட்ட உதவிகள் தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்
தூத்துக்குடியில் நடந்த மாற்றுத்திறனாளிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில், 11 பேருக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் மனு கொடுத்தனர். தொடர்ந்து 11 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.63 ஆயிரத்து 870 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், உதவி கலெக்டர் (பயிற்சி) அனு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தியாகராஜன், உதவி கலெக்டர்கள் (பயிற்சி) முத்து மாதவன், சத்யா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் கலெக்டர் சந்தீப் நந்தூரி நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள், உபகரணங்கள் வழங்கி வருகிறது. மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை மனுக்களை அளிப்பதற்காக சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் 138 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு உள்ளன. இந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும், தகுதியான அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story