கீழக்குறிச்சி, குளத்தூரில் பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்த ஒத்திகை மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்
கீழக்குறிச்சி, குளத்தூரில் பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்த ஒத்திகை நடைபெற்றது. இதில் மாணவ-மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
அன்னவாசல்,
அன்னவாசல் அருகே உள்ள கீழக்குறிச்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இலுப்பூர் தீயணைப்புத்துறை சார்பில் பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்த ஒத்திகை நடைபெற்றது. இலுப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் குணசேகரன் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் சந்திரபோஸ் முன்னிலை வகித்தார். இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் கருணாநிதி கலந்து கொண்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு, தீ தடுப்பு குறித்து விழிப் புணர்வை ஏற்படுத்தினார். இதில் மாவட்ட சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் காமராசு, பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் குபேந்திரன், சுப்பிரமணியன், பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதில் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு, நீண்ட பத்தியை கொண்டு பட்டாசு வெடிக்க வேண்டும். அதிகளவு பட்டாசை வீட்டில் வைத்திருக்கக் கூடாது. வெடிக்காத பட்டாசுகளை கையில் எடுக்கக் கூடாது என எடுத்துரைத்தனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் கொண்ட குழுவினர் மாணவர்களுக்கு இதுகுறித்து ஒத்திகை செய்து காட்டினர். முன்னதாக மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
கீரனூர் தீயணைப்பு நிலையம் சார்பில் குளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாணவ-மாணவிகளுக்கு விபத்தில்லா தீபாவளியை எப்படி கொண்டாடுவது குறித்த செய்முறை விளக்கம் நடைபெற்றது. இதில் தீயணைப்பு படைவீரர்கள் கலந்து கொண்டு தீபாவளிக்கு எப்படி பட்டாசு வெடிக்க வேண்டும் என்று செய்து காட்டினர். இதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story