திருமணமான 8 மாதத்தில் இளம்பெண் கழுத்தை நெரித்து கொலை கணவர் போலீசில் சரண்
திருமணமான 8 மாதத்தில் இளம்பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்த கணவர் போலீசில் சரண் அடைந்தார்.
மும்பை,
மும்பை பாண்டுப் ஹனுமந்த் நகர் குடிசை பகுதியை சேர்ந்தவர் அமர் பாபு(வயது22). இவரது மனைவி நிஷா(19). இவர்களுக்கு திருமணமாகி 8 மாதங்கள் ஆகிறது. இந்தநிலையில், நிஷாவின் நடத்தையில் அமர் பாபு சந்தேகம் அடைந்தார். மனைவிக்கு வேறொரு வாலிபருடன் தொடர்பு இருப்பதாக கருதி அடிக்கடி சண்டையிட்டு வந்தார்.
சம்பவத்தன்றும் கணவர், மனைவி இடையே இது தொடர்பாக மீண்டும் தகராறு உண்டானது. அப்போது, மனைவியின் நடத்தை பற்றி அவர் இழிவாக பேசினார்.
இந்த சண்டை முற்றியதில் கடும் கோபம் அடைந்த அமர் பாபு வீட்டில் இருந்த கயிற்றால் மனைவியின் கழுத்தை நெரித்தார். இதில் நிஷா மூச்சுத்திணறி மயங்கி விழுந்தார். இதனால் பயந்து போன அமர் பாபு அங்கிருந்து ஓடிவிட்டார். அக்கம்பக்கத்தினர் நிஷாவை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்தநிலையில், அமர் பாபு விக்ரோலி பார்க்சைட் போலீஸ் நிலையத்தில் சம்பவத்தை கூறி போலீசாரிடம் சரண் அடைந்தார்.
போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் நிஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அமர் பாபுவை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் ஒப்படைத்தனர்.

Related Tags :
Next Story