தானே பகுதியில் வீடுகளில் கொள்ளையடித்து வந்த 3 பேர் பிடிபட்டனர் ரூ.8½ லட்சம் நகை, பணம் பறிமுதல்


தானே பகுதியில் வீடுகளில் கொள்ளையடித்து வந்த 3 பேர் பிடிபட்டனர் ரூ.8½ லட்சம் நகை, பணம் பறிமுதல்
x
தினத்தந்தி 3 Nov 2018 4:24 AM IST (Updated: 3 Nov 2018 4:24 AM IST)
t-max-icont-min-icon

தானே பகுதியில், வீடுகளில் கொள்ளையடித்து வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ரூ.8½ லட்சம் மதிப்புள்ள நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

தானே,

தானே மும்ரா, கல்வாவில் கடந்த சில மாதங்களாக பூட்டி கிடக்கும் வீடுகளில் மர்மநபர்கள் புகுந்து கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றி வந்தனர். இதில் தொடர்புடைய கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து கொள்ளை நடந்த இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராவில், பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, 3 ஆசாமிகள் இந்த கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த அவர்களது உருவத்தை கொண்டு போலீசார் 3 பேரையும் வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கோப்ரி பகுதிக்கு 3 பேர் வரவுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் அங்கு சென்று கண்காணித்தனர். அப்போது, அங்கு வந்த 3 பேரையும் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் மும்பை காஞ்சூர்மார்க்கை சேர்ந்த ரோகித் சசிகாந்த் (வயது34), விராரை சேர்ந்த சஞ்சு ஷெட்டி (33), சார்க்கோப்பை சேர்ந்த பூஷன் (24) என்பது தெரியவந்தது.

அவர்களிடமிருந்து ரூ.8 லட்சத்து 48 ஆயிரம் மதிப்புள்ள நகை, பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். விசாரணையில் இவர்களுக்கு மேலும் 14 திருட்டு வழக்குகளில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

Next Story