ஆலங்குளம் அருகே லாரி– மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர்கள் 2 பேர் பலி
ஆலங்குளம் அருகே லாரி, மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர்கள் 2 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
ஆலங்குளம்,
ஆலங்குளம் அருகே லாரி, மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர்கள் 2 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
குற்றாலத்தில் குளிக்க...திண்டுக்கல் அருகே உள்ள காரியாப்பட்டியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 34). பைனான்சியர். இவருடைய நண்பர் சஞ்சீவகுமார் (26). லாரி டிரைவர். 2 பேரும் சம்பவத்தன்று நெல்லை அருகே பாளையங்கோட்டையில் உள்ள தனது நண்பரை பார்க்க வந்தனர். பின்னர் 2 பேரும் நண்பரின் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு, குற்றாலத்திற்கு குளிக்க சென்றனர். அங்கு 2 பேரும் மகிழ்ச்சியாக குளித்தனர். பின்னர் அங்கிருந்து 2 பேரும் அதே மோட்டார் சைக்கிளில் பாளையங்கோட்டைக்கு சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை ரவிச்சந்திரன் ஓட்டினார்.
2 பேர் பலிமோட்டார் சைக்கிள் ஆலங்குளம் அருகே உள்ள புதூர் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது அந்த பகுதியில் வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கிவீசப்பட்ட 2 பேரும் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்த சீதபற்பநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கைதுமேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, லாரியை ஓட்டி வந்த கேரள மாநிலம் கோழிக்கோடை சேர்ந்த அஷ்ரப் என்பவரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.