திருவேங்கடம் அருகே மனைவி கழுத்தை அறுத்துக் கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு
திருவேங்கடம் அருகே மனைவி கழுத்தை அறுத்துக் கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை கோர்ட்டில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
நெல்லை,
திருவேங்கடம் அருகே மனைவி கழுத்தை அறுத்துக் கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை கோர்ட்டில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
தொழிலாளி
நெல்லை மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள அடைக்கலப்பட்டி கிராமம் கிணற்று தெருவை சேர்ந்தவர் கருப்பையா (வயது 63). முடி திருத்தும் தொழிலாளி. இவருடைய மனைவி மூக்கம்மாள் (55). இவர்களுக்கு கருப்பழகன், மாரிமுத்து என்ற 2 மகன்களும், முத்துலட்சுமி என்ற மகளும் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
மூக்கம்மாளுக்கு பல ஆண்டுகளாக நரம்பு தளர்ச்சி நோய் இருந்தது. கருப்பையா பல ஆஸ்பத்திரிகளுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வந்தார். அப்படி இருந்தும் மூக்கம்மாளுக்கு நோய் குணமாகவில்லை.
கழுத்தை அறுத்து கொலை
இந்த நிலையில் கடந்த 2017–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15–ந் தேதி கருப்பழகன் திருவேங்கடம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று தனது தாய்க்கு தேவையான மருந்து, மாத்திரைகளை வாங்கி வந்தார். அதை தந்தை கருப்பையாவிடம் கொடுத்து சரியாக மருந்தை கொடுக்குமாறு கூறினார்.
அந்த மருந்தை கொடுக்கும் போது கணவன்–மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. உன்னால் குடும்பமே சிரமப்படுகிறது என்று கூறிய கருப்பையா, மூக்கம்மாளின் தலைமுடியை பிடித்து அடித்தார். பின்னர் அருகில் கிடந்த கத்தியால் மூக்கம்மாளின் கழுத்தை அறுத்துக் கொலை செய்தார்.
ஆயுள் தண்டனை
இதுகுறித்து திருவேங்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கருப்பையாவை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு நெல்லை 4–வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிபதி கிளாட்சன் பிளசட் தாகூர் வழக்கை விசாரித்து நேற்று தீர்ப்பு அளித்தார்.
இதில் கருப்பையாவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதிக்கப்பட்டது. இதையடுத்து கருப்பையாவை போலீசார் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் துரை முத்துராஜ் ஆஜராகி வாதாடினார்.
Related Tags :
Next Story