செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டுவதை கைவிட வேண்டும் துணை போலீஸ் சூப்பிரண்டு பேச்சு


செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டுவதை கைவிட வேண்டும் துணை போலீஸ் சூப்பிரண்டு பேச்சு
x
தினத்தந்தி 3 Nov 2018 9:44 PM GMT (Updated: 3 Nov 2018 9:44 PM GMT)

செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டுவதை கைவிட வேண்டும் என்று ஊத்துக்கோட்டையில் நடந்த நிகழ்ச்சியில் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் தெரிவித்தார்.

ஊத்துக்கோட்டை,

ஊத்துக்கோட்டையில் உள்ள பழமை வாய்ந்த அரசு தொடக்கப்பள்ளியில் விபத்துகள் இல்லாமல் தீபாவளி கொண்டாடுவது எப்படி என்பது குறித்து மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்கு தலைமை ஆசிரியர் கதிரவன் தலைமை தாங்கினார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நித்தியானந்தம், கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் சித்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெற்றோர், ஆசிரியர் கழக தலைவர் லட்சுமிபதி வரவேற்றார்.

துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியதாவது:-

சாலை விபத்துகள் ஏற்பட்டால் உயிர் இழப்பு சம்பவங்களை தடுக்கவே கோர்ட்டு மற்றும் காவல்துறை வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. அபராதமும் விதிக்கப்படுகிறது.

மேலும் விபத்துகள் ஏற்படாமல் தடுக்க வாகன சோதனையின்போது கடுமையாக நடந்து கொள்ள வேண்டி உள்ளது. வாகன ஓட்டிகள் செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டுவதை கைவிட வேண்டு்ம்.

செல்போனில் பேசி கொண்டு வாகனங்கள் ஓட்டுவதாலும், வாகனங்களை சாலையின் மிக அருகாமையில் நிறுத்தி விட்டு செல்வதாலும் விபத்துகள் அதிகமாக ஏற்படுகிறது. மறுபுறம் சாலையின் மிக அருகாமையில் வாகனங்களை நிறுத்துவோர் பூட்டு போட மறந்து விடுவதால் வாகனங்கள் திருடப்படுகின்றன. தீபாவளி அன்று அதிக சத்தம் தரும் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் ஷேக்தாவூத், நகர அ.தி.மு.க. அவைத்தலைவர் அருணாசலம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story