பொடவூர், வண்ணான்குப்பம் ஊராட்சிகளில் அம்மா திட்ட முகாம்


பொடவூர், வண்ணான்குப்பம் ஊராட்சிகளில் அம்மா திட்ட முகாம்
x
தினத்தந்தி 4 Nov 2018 3:18 AM IST (Updated: 4 Nov 2018 3:18 AM IST)
t-max-icont-min-icon

பொடவூர், வண்ணான்குப்பம் ஊராட்சிகளில் அம்மா திட்ட முகாம் நடந்தது.

ஸ்ரீபெரும்புதூர்,

ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் பொடவூர் ஊராட்சியில் அம்மா திட்ட முகாம் நடந்தது. இதற்கு ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. மதனந்தபுரம் கே.பழனி தலைமை தாங்கினார். தனி தாசில்தார் (சமூக பாதுகாப்பு) கவிதா, மண்டல துணை தாசில்தார் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் 50 பேருக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டது.

மாற்றுத்திறனாளிகள் 2 பேருக்கு உதவித்தொகை, 3 பேருக்கு முதியோர் உதவித்தொகை, 2 பேருக்கு விதவை உதவித்தொகை வழங்கப்பட்டது. முகாமில் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன. முன்னதாக கண்சிகிச்சை முகாம் நடைபெற்றது. இதில் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் செந்தில்ராஜன் உள்பட பலர் கலந்துகெண்டனர்.

ஊத்துக்கோட்டை அருகே உள்ள வண்ணான்குப்பம் ஊராட்சியில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. வருவாய் அலுவலர் ரவி தலைமை தாங்கினார். கிராம நிர்வாக அலுவலர் முருகையன் முன்னிலை வகித்தார். துயர்துடைப்பு தாசில்தார் லதா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.

இந்த முகாமில் சாதி சான்று, வீட்டுமனை பட்டா, பட்டா பெயர் மாற்றம், புதிய ரேஷன்கார்டு, பிறப்பு, இறப்பு சான்றிதழ், முதியோர் உதவித்தொகை கேட்டு மொத்தம் 40 பேர் துயர் துடைப்பு தாசில்தார் லதாவிடம் மனுக்களை அளித்தனர். அனைத்து மனுக்களும் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. ஊராட்சி உதவியாளர் அருள், கிராம செயலாளர் ஆனந்த் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story