இந்திராணி முகர்ஜியின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி


இந்திராணி முகர்ஜியின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி
x
தினத்தந்தி 4 Nov 2018 5:00 AM IST (Updated: 4 Nov 2018 3:27 AM IST)
t-max-icont-min-icon

ஷீனாபோரா கொலை வழக்கில் இந்திராணி முகர்ஜியின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்டது.

மும்பை,

மகள் ஷீனாபோரா கொலை வழக்கில் கைதாகி பைகுல்லா சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர் இந்திராணி முகர்ஜி. இவர் தனது உடல்நிலை மோசமாக உள்ளதாகவும், சிறையில் தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும் கூறி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்திராணி முகர்ஜியின் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் தீவிர தன்மையை சுட்டிக்காட்டி கோர்ட்டு அவரின் மனுவை தள்ளுபடி செய்தது.

இந்திராணி முகர்ஜியின் ஜாமீன் மனு சிறப்பு கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்படுவது, இது 2-வது முறையாகும்.

Next Story