கை சுத்தம் அவசியம்!
டெங்கு காய்ச்சல் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ள அன்றாட பழக்க வழக்கங்களிலும் கவனம் செலுத்த வேண்டும்.
டெங்கு காய்ச்சல் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ள அன்றாட பழக்க வழக்கங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். உடல் உறுப்புகளில் கிருமிகள், அழுக்குகள் படியாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். முகம், கண், மூக்கு, வாய் போன்ற பகுதிகளில் படிந்திருக்கும் வைரஸ் கிருமிகள் சுவாச அமைப்புக்குள் ஊடுருவி செல்ல வாய்ப்பிருக்கிறது.
கைகளை வாய்க்குள் வைக்கும்போது அதன் மூலம் எளிதாக வைரஸ் கிருமிகள் உடலுக்குள் பரவிவிடும். அதனால் கைகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும். சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும் கைகளை நன்றாக கழுவ வேண்டும். விரல் நகங்களையும் சுத்தம் செய்ய வேண்டும். வெதுவெதுப்பான நீரில் கைகளை கழுவுவது நல்லது. கைகளை கழுவுவதற்கு அதற்குரிய லோஷன்களை பயன்படுத்துவது நல்லது. அவை வைரஸ் கிருமிகளை செயலிழக்க செய்துவிடும்.
வெளி இடங்களுக்கு செல்லும்போது மூக்கு, வாய் பகுதியை ‘மாஸ்க்’ போட்டு மூடிவிட்டு செல்வது நல்லது. சுற்றி இருப்பவர்கள் தும்மல், இருமல் போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகி இருந்தால் அவர்களிடம் இருந்து நோய் தொற்று பரவாமல் தடுக்க இது உதவும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் அதற்குரிய ‘மாஸ்க்’கை முகத்தில் அணிந்து கொள்ள வேண்டியது அவசியமானது. ‘மாஸ்க்’ காற்று, ஈரப்பதம் மூலம் பரவும் வைரஸ்களை வடிகட்ட உதவும். அதனால் பருவகால காய்ச்சல் பாதிப்புகளை 80 சதவீதம் தடுத்துவிடலாம்.
Related Tags :
Next Story