கிளாம்பாக்கம் தற்காலிக பஸ் நிலையத்தில் கலெக்டர் ஆய்வு
கிளாம்பாக்கம் தற்காலிக பஸ் நிலையத்தில் கலெக்டர் பொன்னையா ஆய்வு மேற்கொண்டார்.
வண்டலூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் சி.எம்.டி.ஏ.வுக்கு சொந்தமான இடத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் மற்றும் தாம்பரம் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பஸ்களும் கிளாம்பாக்கத்தில் உள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் நின்று செல்கிறது.
இந்த நிலையில் நேற்று காலை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பஸ் நிலையத்தை நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அப்போது அங்கு பஸ் ஏறுவதற்காக காத்திருந்த பயணிகளிடம் தற்காலிக பஸ் நிலையத்தில் செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து மாவட்ட கலெக்டர் பொன்னையா கேட்டறிந்தார். பின்னர் பஸ் நிலையத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டார்.
அப்போது அவருடன் செங்கல்பட்டு ஆர்.டி.ஒ. முத்துவடிவேல், வண்டலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வளவன், நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சி செயல் அலுவலர் மகேஸ்வரன், அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story