தாம்பரத்தில் ஆதரவற்ற குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய போலீசார்

தாம்பரத்தில் ஆதரவற்ற குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய போலீசார்
x
தினத்தந்தி 6 Nov 2018 3:30 AM IST (Updated: 5 Nov 2018 10:30 PM IST)
t-max-icont-min-icon

சென்னையை அடுத்த தாம்பரத்தில் தீபாவளி பண்டிகையை ஆதரவற்ற குழந்தைகளுடன் பட்டாசு, இனிப்புகள், புத்தாடைகள் வழங்கி போலீசார் கொண்டாடினர்.

சென்னை

சென்னையை அடுத்த தாம்பரத்தில் தீபாவளி பண்டிகையை ஆதரவற்ற குழந்தைகளுடன் பட்டாசு, இனிப்புகள், புத்தாடைகள் வழங்கி போலீசார் கொண்டாடினர்.

தீபாவளி பண்டிகையை தாம்பரத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுடன் போலீசார் கொண்டாடினர். தாம்பரத்தில் உள்ள ‘குட்லைப் சென்டர்’ என்ற ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கியுள்ள 65 குழந்தைகளுக்கு உணவு, இனிப்புகள், புது ஆடைகள், பட்டாசுகள் ஆகியவற்றை வழங்கி போலீசார் தீபாவளி பண்டிகையை கொண்டாடினர்.

சென்னை தெற்கு போலீஸ் இணை ஆணையர் மகேஸ்வரி ஆதரவற்ற குழந்தைகளுக்கு புது ஆடைகள், இனிப்புகள் பட்டாசுகளை வழங்கி தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்தார். ஆதரவற்ற குழந்தைகள் தங்களுடன் வந்து தீபாவளி பண்டிகையை கொண்டாடிய போலீசாருக்கு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்தனர்.

பரங்கிமலை துணை கமி‌ஷனர் முத்துசாமி, தாம்பரம் உதவி கமி‌ஷனர் அசோகன், இன்ஸ்பெக்டர்கள் பீரவின் ராஜேஷ், கமலக்கண்ணன், சிவக்குமார், சந்திரமோகன், ஆதரவற்றோர் இல்ல நிர்வாகி பாஸ்கர் மற்றும் போலீசார் இதில் கலந்துகொண்டனர்.

Next Story