அவசர உதவிக்கு போலீஸ் செயலி அறிமுகம்


அவசர உதவிக்கு போலீஸ் செயலி அறிமுகம்
x
தினத்தந்தி 6 Nov 2018 4:30 AM IST (Updated: 5 Nov 2018 10:52 PM IST)
t-max-icont-min-icon

அவசர உதவிக்கு போலீஸ் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை, 

சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

பெண்கள், முதியோர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பிற்காகவும், அவசர உதவிக்காகவும் சென்னை காவல்துறை சார்பில் 24 மணி நேரமும் இயங்கக் கூடிய வகையில் kavalan sos App (காவலன் எஸ் ஓ எஸ் ஆப்) செல்போன் செயலி அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த செயலியை அனைத்து ‘ஆன்ட்ராய்டு’ மற்றும் ‘ஐ–போன்’களில் பயன்படுத்தலாம். அவசரத்தில் அழைப்பதற்கு செயலி பொத்தானை ஒரு முறை தொட்டாலே அழைப்பவரின் இருப்பிடம் ஜி.பி.எஸ். மூலம் அறியப்படும். செல்போன் கேமரா தானாகவே 15 வினாடிகளில் ஒலி, ஒளியுடன் கூடிய வீடியோ எடுத்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பிவிடும். இந்த செயலி தமிழ், ஆங்கிலம் ஆகிய 2 மொழிகளில் இயங்கும். இணைய இணைப்பு இல்லாத (டேட்டா வசதி) இடங்களிலும் கூட தானியங்கி எச்சரிக்கை மூலம் செயல்படும்.

அழைப்பவரை உடனடியாக திரும்ப அழைக்கும் வசதி போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் உள்ளது. மேலும் அழைப்பவரின் கணநேரம் கண்காணிப்பு வசதியும் உள்ளது.

அழைப்பவரின் இருப்பிட தகவல் மற்றும் வரைபடம் இந்த செயலியில் பதிவு செய்துள்ளவர்களின் எண்களுக்கு தானாகவே பகிரப்படும். இந்த செயலி குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 50 ஆயிரம் துண்டுபிரசுரங்கள் போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவுப்படி இணை கமி‌ஷனர் ஏ.ஜி.பாபு மேற்பார்வையில் போலீஸ் கட்டுப்பாட்டு அறை துணை கமி‌ஷனர் கே.பிரபாகர் தலைமையில் போலீசாருக்கு வழங்கப்பட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story