மாவட்ட செய்திகள்

மயிலாடுதுறை அருகே சாராயம் கடத்திய 4 பேர் கைது பெண்கள் உள்பட 5 பேருக்கு வலைவீச்சு + "||" + Four men arrested by a burglary near Mayiladuthurai arrested 5 people including women

மயிலாடுதுறை அருகே சாராயம் கடத்திய 4 பேர் கைது பெண்கள் உள்பட 5 பேருக்கு வலைவீச்சு

மயிலாடுதுறை அருகே சாராயம் கடத்திய 4 பேர் கைது பெண்கள் உள்பட 5 பேருக்கு வலைவீச்சு
மயிலாடுதுறை அருகே சாராயம் கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக பெண்கள் உள்பட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
குத்தாலம்,

மயிலாடுதுறை அருகே திருமங்கலம் ஆர்ச் அருகில் பாலையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 110 லிட்டர் சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பெரம்பூர் கீழத்தெருவை சேர்ந்த குணசேகரன் மகன் வினோத் (வயது 30) என்பவரை கைது செய்தனர்.


கைது

மயிலாடுதுறை அருகே காருகுடியில் பெரம்பூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சாராயம் கடத்திய குத்தாலம் அருகே அசிக்காடு பெரிய தெருவை சேர்ந்த வீராசாமி மகன் முத்துராமன் (35) என்பவரை கைது செய்தனர். இதேபோல சாராயம் கடத்தி வந்த அசிக்காடு காவிரி தெருவை சேர்ந்த காசிநாதன் மகன் பாரதிராஜா (24) என்பவரையும், கொங்கானோடையில் நண்டலாற்று பாலம் அருகே சாராயம் கடத்திய திருவாரூர் மாவட்டம் கீரனூர்-வாளூர் கிராமத்தை சேர்ந்த ராஜா (48) என்பவரையும் பெரம்பூர் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்குகள் தொடர்பாக 3 பெண்கள் உள்பட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. காதல் திருமணம் செய்த வாலிபரை காரில் கடத்தி தாக்கிய கும்பல்
காதல் திருமணம் செய்த வாலிபரை காரில் கடத்தி மர்ம கும்பல் தாக்கியது. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
2. நள்ளிரவு போலீசார் வேட்டை மணல் கடத்த முயன்ற 10 பேர் கைது; 4 பேர் தப்பி ஓட்டம் 7 வாகனங்கள் பறிமுதல்
திருச்சி அருகே நள்ளிரவு போலீசார் நடத்திய வேட்டையில் மணல் கடத்த முயன்ற 10 பேர் கைது செய்யப்பட்டனர். 4 பேர் தப்பி ஓடிவிட்டனர்.
3. கும்பகோணத்தில் ரூ.30 லட்சம் கேட்டு கல்லூரி மாணவி கடத்தல் போலீசார் விசாரணை
கும்பகோணத்தில் ரூ.30 லட்சம் கேட்டு கல்லூரி மாணவி கடத்தப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
4. ஆங்கிலேயர் ஆட்சியில்தான் வெளிநாடுகளுக்கு அதிக சிலைகள் கடத்தல் தொல்லியல் துறை இயக்குனர் திடுக்கிடும் தகவல்
ஆங்கிலேயர்கள் ஆட்சியில்தான் வெளிநாடுகளுக்கு அதிக அளவில் சிலைகள் கடத்தப்பட்டன என்று தொல்லியல் துறை இயக்குனர் கூறினார்.
5. கருங்கல் அருகே 1,000 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல்
கருங்கல் அருகே கேரளாவுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த 1,000 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது.