அறந்தாங்கி ரெத்தினசபாபதி எம்.எல்.ஏ. வைரஸ் காய்ச்சலால் அவதி ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை


அறந்தாங்கி ரெத்தினசபாபதி எம்.எல்.ஏ. வைரஸ் காய்ச்சலால் அவதி ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 6 Nov 2018 4:30 AM IST (Updated: 6 Nov 2018 1:47 AM IST)
t-max-icont-min-icon

அறந்தாங்கி ரெத்தினசபாபதி எம்.எல்.ஏ. வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

அறந்தாங்கி,

தமிழகம் முழுவதும் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் 50-க்கும் மேற்பட்டோர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பலர் திருச்சி, தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் அறந்தாங்கி எம்.எல்.ஏ. ரெத்தினசபாபதி, அம்மா மக்கள் முன்னேற்ற கழக நகர செயலாளர் சிவசண்முகம் ஆகியோருக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டு அவதிப்பட்டனர். இதனை தொடர்ந்து ரெத்தினசபாபதி எம்.எல்.ஏ. புதுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியிலும், சிவசண்முகம் அறந்தாங்கியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அ.ம.மு.க. ஆதரவு எம்.எல்.ஏ.

ரெத்தினசபாபதி நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் அறந்தாங்கி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.வாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story