கோர்ட்டு வளாகத்தில் இருந்து தப்பிஓடிய விசாரணை கைதி குஜராத்தில் பிடிபட்டார்


கோர்ட்டு வளாகத்தில் இருந்து தப்பிஓடிய விசாரணை கைதி குஜராத்தில் பிடிபட்டார்
x
தினத்தந்தி 7 Nov 2018 4:00 AM IST (Updated: 6 Nov 2018 2:44 AM IST)
t-max-icont-min-icon

கோர்ட்டு வளாகத்தில் இருந்துதப்பி ஓடிய விசாரணை கைதி குஜராத்தில் போலீசாரிடம் பிடிபட்டார்.

மும்பை,

மும்பையை சேர்ந்தவர் லோகேஷ் தர்ஜி(வயது32). இவர் மீது அந்தேரி போலீஸ் நிலையம் மற்றும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த புகார் தொடர்பாக அவரை போலீசார் கைது செய்தனர்.

கடந்த 3-ந்தேதி போலீசார் அவரை எஸ்பிளன்டே கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்து வந்து இருந்தனர். அப்போது, திடீரென அவர் கோர்ட்டு வளாகத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டார்.

குஜராத்தில் சிக்கினார்

இது தொடர்பாக ஆசாத் மைதான் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடிவந்தனர். இந்தநிலையில் லோகேஷ் தர்ஜி குஜராத் மாநிலத்தில் பதுங்கி இருப்பதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில் போலீசார் அங்கு சென்று உள்ளூர் போலீசார் உதவியுடன் லோகேஷ் தர்ஜியை சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் மும்பை அழைத்து வரப்பட்ட அவர், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story