கவர்னர் கிரண்பெடி தீபாவளி வாழ்த்து
தீபாவளி பண்டிகையொட்டி, கவர்னர் கிரண்பெடி புதுச்சேரி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி,
தீபாவளி பண்டிகையொட்டி கவர்னர் கிரண்பெடி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
தீப ஒளி பண்டிகையான தீபாவளி இந்தியா மட்டுமல்லாது உலக அளவிலும் மகிழ்ச்சியாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அனைவரது வாழ்விலும் நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் உடல்நலம் செழித்தோங்க வாழ்த்துகிறேன்.
புதுச்சேரி மக்கள் மற்றும் இந்தியர்கள் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த பாதுகாப்பான மற்றும் பசுமையான தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த வாழ்த்து செய்தியில் கவர்னர் கிரண்பெடி கூறியுள்ளார்.
Related Tags :
Next Story