கூடங்குளம் அருகே கடலில் மூழ்கி 2 சிறுவர்கள் சாவு


கூடங்குளம் அருகே கடலில் மூழ்கி 2 சிறுவர்கள் சாவு
x
தினத்தந்தி 7 Nov 2018 4:30 AM IST (Updated: 7 Nov 2018 12:21 AM IST)
t-max-icont-min-icon

கூடங்குளம் அருகே கடலில் மூழ்கி 2 சிறுவர்கள் பலியானார்கள்.

வள்ளியூர், 

கூடங்குளம் அருகே கடலில் மூழ்கி 2 சிறுவர்கள் பலியானார்கள்.

சிறுவர்கள்

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள பெருமணல் கிராமத்தை சேர்ந்த கென்னடி மகன் ரிசோ (வயது 10). அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். அதே ஊரை சேர்ந்த செல்வன் மகன் சந்தியாகு ராயப்பன் (11). 6-ம் வகுப்பு படித்து வந்தான்.

தீபாவளி பண்டிகையையொட்டி அந்த ஊரை சேர்ந்த சிறுவர்கள் பெருமணல் கடற்கரைக்கு சென்று விளையாடினர். ஒருசிலர் கடலில் குளித்து மகிழ்ந்தனர். இதில் ரிசோ மற்றும் சந்தியாகு ராயப்பனும் கடலுக்குள் இறங்கி குளித்தனர்.

கடலில் மூழ்கி பலி

அப்போது எதிர்பாராத விதமாக ராட்சத அலைகள் கடலில் ஏற்பட்டது. இதில் ரிசோ மற்றும் சந்தியாகு ராயப்பனும் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டனர். அவர்கள் கடலில் மூழ்கினர்.

இதைக்கண்ட மீனவர்கள் மற்றும் அந்த பகுதியில் நின்றிருந்தவர்கள் கடலுக்குள் சென்று 2 மாணவர்களையும் கரைக்கு மீட்டு வந்தனர். அப்போது அவர்கள் மூச்சுத்திணறி மயங்கிய நிலையில் இருந்தனர்.

இதையடுத்து ஒரு மாணவனை நாகர்கோவில் ஆஸ்பத்திரிக்கும், மற்றொரு மாணவரை கூடங்குளம் அணுவிஜய் நகரியத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கும் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே 2 பேரும் பரிதாபமாக இறந்தனர்.

இதுகுறித்து கடலோர பாதுகாப்பு குழு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story