தீபாவளி பண்டிகை உற்சாக கொண்டாட்டம்


தீபாவளி பண்டிகை உற்சாக கொண்டாட்டம்
x
தினத்தந்தி 7 Nov 2018 5:00 AM IST (Updated: 7 Nov 2018 1:48 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

மும்பை, 

மராட்டியத்தில் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

தீபாவளி

மராட்டியத்தில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகை 5 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகை தந்தேராஸ் கொண்டாட்டத்துடன் தொடங்கியது. தீபாவளி பண்டிகையை மராட்டிய மக்கள் புத்தாடைகள், பட்டாசுகள் வாங்கியும், இனிப்புகள் செய்தும் வழக்கமான உற்சாகத்துடன் வரவேற்றனர்.

வீடுகளில் வண்ண கோலங்கள் இட்டு தீபவிளக்குகளை ஏற்றி வைத்திருந்தனர். மேலும் ‘கந்தில்’ எனப்படும் அலங்கார மின்விளக்குகளையும் தொங்க விட்டிருந்தனர். அடுக்குமாடி கட்டிடங்களில் செய்யப்பட்டு இருந்த மின்விளக்கு அலங்காரங்கள் கண்ணை கவர்ந்தன.

இது தவிர நட்சத்திர ஓட்டல்கள், வணிக வளாகங்கள், கடைகள் மின்னொளி அலங்காரத்தில் ஜொலித்தன.

தமிழர்கள் கொண்டாட்டம்

தீபாவளியின் இரண்டாவது நாளான நேற்று நகரசதுர்த்தசி கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழர்கள் அதிகாலையிலேயே எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்தனர்.

தீபாவளி பண்டிகையை தமிழகத்தில் உள்ளது போன்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடினர். இரவு மத்தாப்பு, தரைச்சக்கரம், புஷ்வானம் கொளுத்தியும், தங்கள் வீடுகளில் செய்த இனிப்புகளை உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கொடுத்து மகிழ்ந்தனர்.

மராட்டிய மக்கள் இன்று (புதன்கிழமை) பெரிய தீபாவளி எனப்படும் லட்சுமி பூஜையை கொண்டாடுகிறார்கள். நாளை (வியாழக்கிழமை) கோவர்த்தண பூஜையும், நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) பாவ்- பீஜ் பண்டிகையும் கொண்டாடப்படுகிறது.

Next Story