பைதோனியில் ஆயத்த ஆடை நிறுவன உரிமையாளர் தற்கொலை


பைதோனியில் ஆயத்த ஆடை நிறுவன உரிமையாளர் தற்கொலை
x
தினத்தந்தி 7 Nov 2018 3:30 AM IST (Updated: 7 Nov 2018 3:09 AM IST)
t-max-icont-min-icon

பைதோனியில் ஆயத்த ஆடை நிறுவன உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அழுகிய நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டது.

மும்பை,

பைதோனியில் ஆயத்த ஆடை நிறுவன உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அழுகிய நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டது.

துர்நாற்றம்

மும்பை பைதோனி யூசுப் மெகர் அலிரோடு பகுதியில் உள்ள சாய் மன்சில் என்ற கட்டிடத்தில் வசித்து வந்தவர் சோகைல் லிம்புவாலா (வயது30). இவர் ஆயத்த ஆடை நிறுவனம் நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இவரது வீட்டில் இருந்து சகிக்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசியது.

இதனால் சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டுக்காரர்கள் பைதோனி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

அப்போது, சோகைல் லிம்புவாலாவின் வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

தற்கொலை

அறையில் சோகைல் லிம்புவாலா தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். அவரது உடல் அழுகிய நிலையில் இருந்தது. போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

உடல் அழுகிய நிலையில் இருந்ததால் அவர் 2 நாட்களுக்கு முன்னரே தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். என்ன காரணத்துக்காக இந்த விபரீத முடிவை எடுத்தார் என்பது தெரியவில்லை. பணப்பிரச்சினை அல்லது குடும்ப விஷயம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்பதை கண்டறிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story