திருவொற்றியூரில் சப்-இன்ஸ்பெக்டருடன் தகராறு; 2 பேர் கைது
திருவொற்றியூரில் சப்-இன்ஸ்பெக்டருடன் தகராறில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவொற்றியூர்,
திருவொற்றியூர் மஸ்தான் கோவில் தெருவில் நேற்று முன்தினம் இரவு தீபாவளி கொண்டாடிய சிலர், குடித்து விட்டு போதையில் தகராறு செய்வதாக திருவொற்றியூர் போலீசாருக்கு தகவல் வந்தது. உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர் குமார், சம்பவ இடத்துக்கு சென்று குடிபோதையில் தகராறில் ஈடுபட்டவர்களை தடுத்து, அவர்களை வீட்டுக்கு செல்லும்படி அறிவுறுத்தினார்.
இதனால் ஆத்திரமடைந்த 2 பேர், சப்-இன்ஸ்பெக்டர் குமாரின் சட்டையை பிடித்து, அவருடன் தகராறில் ஈடுபட்டனர். பின்னர் சுதாரித்து கொண்ட சப்-இன்ஸ்பெக்டர் குமார், தன்னுடன் தகராறில் ஈடுபட்ட 2 பேரையும் மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரித்தார்.
அதில் அவர்கள், அதே பகுதியை சேர்ந்த தில்லைசேகர் (வயது 26) மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரிந்தது. 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story