கொசுக்கள் உற்பத்தியாகும் சூழல் ரெயில்வே துறைக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் கலெக்டர் நடவடிக்கை


கொசுக்கள் உற்பத்தியாகும் சூழல் ரெயில்வே துறைக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் கலெக்டர் நடவடிக்கை
x
தினத்தந்தி 7 Nov 2018 11:00 PM GMT (Updated: 7 Nov 2018 6:47 PM GMT)

கொசுக்கள் உற்பத்தியாகும் சூழல் இருந்ததால் ரெயில்வே துறைக்கு ரூ.20 ஆயிரத்து 500 அபராதம் விதித்து கலெக்டர் நடவடிக்கை மேற்கொண்டார்.

தாம்பரம்,

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா காஞ்சீபுரம் பழைய ரெயில் நிலையத்தில் ஆய்வு செய்தார். அப்போது அங்குள்ள தண்டவாளத்தில் குப்பைகள் தேங்கி கிடந்தது. கொசுக்கள் உற்பத்தியாகும் நிலையில் இருந்தது. இதை தொடர்ந்து ரெயில்வே துறைக்கு ரூ.20 ஆயிரத்து 500-ஐ கலெக்டர் பொன்னையா அபராதமாக விதித்தார். பின்னர் அவர் பழைய ரெயில் நிலைய குடியிருப்புகளில் ஆய்வில் ஈடுபட்டார்.

அந்த குடியிருப்புகளில் டெங்கு உற்பத்தி நிலையை கண்டறிந்து அதை உடனடியாக அழிக்க காஞ்சீபுரம் நகராட்சிக்கு பொன்னையா உத்தரவிட்டார். மேலும் அங்குள்ள ஒரு குடியிருப்புக்கு ரூ.500 அபராதம் விதித்தார். கலெக்டர் பொன்னையாவுடன், காஞ்சீபுரம் நகராட்சி என்ஜினீயர் மகேந்திரன், நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி முத்து மற்றும் பலர் உடன் சென்றனர்.

விடுதிக்கு அபராதம்

காஞ்சீபுரம் ரெயில்வே ரோட்டில் உள்ள ஒரு விடுதிக்கு காஞ்சீபுரம் நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி முத்து தலைமையிலான அதிகாரிகள் நேற்று காலை சென்றனர். அங்குள்ள விடுதியில் ஒரு பழைய பக்கெட்டில் தண்ணீருடன் கொசுக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த விடுதிக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.

Next Story