நாகை மாவட்டத்தில் கோர்ட்டு உத்தரவை மீறி பட்டாசு வெடித்ததாக 25 பேர் மீது வழக்கு


நாகை மாவட்டத்தில் கோர்ட்டு உத்தரவை மீறி பட்டாசு வெடித்ததாக 25 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 7 Nov 2018 10:15 PM GMT (Updated: 7 Nov 2018 6:59 PM GMT)

நாகை மாவட்டத்தில் கோர்ட்டு உத்தரவை மீறி பட்டாசு வெடித்ததாக 25 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நாகப்பட்டினம்,

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

நாகை மாவட்டத்தில், அரசு நிர்ணயித்துள்ளதை விடுத்து மற்ற நேரங்களில் பட்டாசு வெடிப்பவர்களை கண்காணிக்க தனிப்படைகள் அமைத்து போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவிட்டு இருந்தார். அதன்படி தனிப்படை போலீசார் மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பட்டாசு வெடிப்பவர்களை கண்காணித்தனர்.

நாகப்பட்டினம் உட்கோட்டத்தில் பட்டாசு வெடித்ததாக நாகூரை சேர்ந்த விக்னேஷ்(வயது 20), ஜெகநாதன்(35), வெளிப்பாளையத்தை சேர்ந்த சிவா(23), மருந்து கொத்தள தெருவை சேர்ந்த அலெக்சாண்டர்(23), திருமருகலை சேர்ந்த தவமணி(21), கணேசன்(18), கீழையூர் காரை தெருவை சேர்ந்த வெங்கடேஸ்வரன்(25), கீழ்வேளூரை சேர்ந்த அஜித்குமார்(23) மற்றும் கூட்ஸ் ரோடு பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதேபோல் மயிலாடுதுறை உட்கோட்டத்தில் மயிலாடுதுறை சேந்தன்குடியை சேர்ந்த குட்டி கோபி(40), ஆனந்ததாண்டவபுரத்தை சேர்ந்த ராஜ்குமார்(29), ஆக்கூர் தெற்கு தெருவை சேர்ந்த அமிர்தகடேசுவரன்(31), நல்லாடை அம்பேத்கர் தெருவை சேர்ந்த முருகவேல்(46), பாலையூரை சேர்ந்த ஜோஸ்வரன்(28), திருவாவடுதுறை பிள்ளையார் தோப்பு பகுதியை சேர்ந்த சாமிநாதன்(50), வில்லியநல்லூரை சேர்ந்த ரமேஷ்(44), மணல்மேடு கார்த்தி(20), கொடிக்காரன் மூலையை சேர்ந்த ராகுல்(19), திருப்புங்கூரை சேர்ந்த தமிழ்வேந்தன்(28).

சீர்காழியை சேர்ந்த மணிகண்டன்(26), கொட்டுப்பாளையம் சிவசுப்பிரமணியன்(50), தரங்கம்பாடியை சேர்ந்த ராஜா(42), திருவெண்காடு குமரேசன்(31), மங்கைமடத்தை சேர்ந்த ரவி(40), மதனபாடியை சேர்ந்த சிலம்பரசன்(28) ஆகிய 25 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Next Story