விளாத்திகுளம் அருகே இருதரப்பினர் மோதல்; 7 பேர் காயம் 14 பேர் கைது


விளாத்திகுளம் அருகே இருதரப்பினர் மோதல்; 7 பேர் காயம் 14 பேர் கைது
x
தினத்தந்தி 8 Nov 2018 3:00 AM IST (Updated: 8 Nov 2018 12:33 AM IST)
t-max-icont-min-icon

விளாத்திகுளம் அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 7 பேர் காயம் அடைந்தனர். இதுதொடர்பாக 14 பேரை போலீசார் கைது செய்தனர்.

விளாத்திகுளம், 

விளாத்திகுளம் அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 7 பேர் காயம் அடைந்தனர். இதுதொடர்பாக 14 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாய்கள் குரைத்ததால்...

விளாத்திகுளம் அருகே சின்னவநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சிலர் நேற்று முன்தினம் மாலையில் பக்கத்து ஊரான மாதராஜபுரத்துக்கு சென்றனர். அப்போது அவர்களைப் பார்த்து நாய்கள் குரைத்தன. இதனால் நாய்களை வளர்க்கின்றவர்களிடம், சின்னவநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர்கள் கண்டித்தனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. ஒருவரை ஒருவர் கம்பாலும், கைகளாலும் தாக்கி கொண்டனர்.

இதில் காயம் அடைந்த சின்னவநாயக்கன்பட்டியைச் சேர்ந்த வேல்சாமி (வயது 64), சதீஷ், காளியம்மாள், லட்சுமணன் ஆகிய 4 பேரும் அருப்புகோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோன்று காயம் அடைந்த மாதராஜபுரத்தைச் சேர்ந்த சண்முகராஜ், பெரிய மாரிமுத்து, கருப்பசாமி ஆகிய 3 பேரையும் விளாத்திகுளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பலத்த காயம் அடைந்த சண்முகராஜை மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

14 பேர் கைது

இதுகுறித்து பெரிய மாரிமுத்து அளித்த புகாரின்பேரில், சங்கரலிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சின்னவநாயக்கன்பட்டியைச் சேர்ந்த முத்துவேல் (51), பரமசிவம் (32), பால்ராஜ் (66), வேல்சாமி, சந்திரன் (51), காளிச்சாமி (42), பாரதிதாசன் (40), தயாநிதி (27) ஆகிய 8 பேரை கைது செய்தனர்.

இதேபோன்று வேல்சாமி அளித்த புகாரின்பேரில், மாதராஜபுரத்தைச் சேர்ந்த பாப்பையா சாமி (45), செல்வம் (48), முருகன் (45), கருப்பசாமி (23), தங்கபாண்டியன் (30), முனியசாமி (32) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

Next Story