சிவகிரி நகர பஞ்சாயத்து அலுவலகத்தில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் அடிப்படை வசதிகள் செய்துதர கோரிக்கை
சிவகிரி நகர பஞ்சாயத்து அலுவலகத்தில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
சிவகிரி,
சிவகிரி நகர பஞ்சாயத்து அலுவலகத்தில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
ஆர்ப்பாட்டம்
சிவகிரி நகர பஞ்சாயத்து 7-வது வார்டு தர்மபுரி பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தெருவிளக்கு வசதி, குடிநீர் வசதி, சுகாதார வளாக வசதி மற்றும் கழிவுநீர் செல்வதற்கு ஏதுவாக வாறுகால் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரிவர செய்து தரப்படவில்லை எனவும், இதுதொடர்பாக புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மதியம் அப்பகுதியை சேர்ந்த 200 பெண்கள் உள்பட 300 பேர் ஊர் தலைவர் இருளப்பன் தலைமையில் சிவகிரி நகர பஞ்சாயத்து அலுவலகத்துக்கு சென்றனர். அலுவலகம் வளாகத்தின் முன் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது, கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கையில் வைத்திருந்தனர்.
கோரிக்கை மனு கொடுத்தனர்
பின்னர் நகர பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி வெங்கிட கோபுவை சந்தித்து, கோரிக்கை மனுவை கொடுத்தனர். மனுவை பெற்றுக் கொண்ட அவர், இன்னும் ஒரு சில நாட்களில் அடிப்படை வசதிகளை செய்து தருவதாக கூறியதன் பேரில், மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் அங்கிருந்து அனைவரும் ஊர்வலமாக தாலுகா அலுவலகத்துக்கு புறப்பட்டுச் சென்றனர். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தாசில்தாரிடமும் மனு வழங்கினர்.
Related Tags :
Next Story