மாவட்ட செய்திகள்

தீபாவளி தினத்தன்று ஈரோடு மாவட்டத்தில் ரூ.6¼ கோடிக்கு மது விற்பனை + "||" + On Diwali day Erode District Liquor sale for Rs.6.5 crore

தீபாவளி தினத்தன்று ஈரோடு மாவட்டத்தில் ரூ.6¼ கோடிக்கு மது விற்பனை

தீபாவளி தினத்தன்று ஈரோடு மாவட்டத்தில் ரூ.6¼ கோடிக்கு மது விற்பனை
தீபாவளி தினத்தன்று ஈரோடு மாவட்டத்தில் ரூ.6¼ கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது.
ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அரசு சார்பில் 186 டாஸ்மாக் மதுக்கடைகள் அமைக்கப்பட்டு மதுவிற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் குடிமகன்களின் வசதிக்காக டாஸ்மாக் கடையையொட்டி பார்களும் அமைக்கப்பட்டு உள்ளன.


டாஸ்மாக் கடைகளில் சாதாரண நாட்களை விட தீபாவளி, பொங்கல், புத்தாண்டு உள்பட முக்கிய நாட்களில் மது விற்பனை 2 மடங்காக அதிகரிக்கிறது. தீபாவளி பண்டிகையான நேற்று முன்தினம் டாஸ்மாக் கடைகளில் குடிமகன்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதனால் மது விற்பனை ஜோராக நடந்தது.

தீபாவளி பண்டிகை மதுவிற்பனை குறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

தீபாவளி பண்டிகையையொட்டி (நேற்று) நேற்று முன்தினம் மட்டும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 186 டாஸ்மாக் கடைகள் மூலம் ரூ.6 கோடியே 38 லட்சத்து 96 ஆயிரத்து 535-க்கு மது விற்பனை ஆகி உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் தினமும் சராசரியாக ரூ.2 கோடி முதல் ரூ.3 கோடி வரை தான் மது விற்பனை ஆகும். ஆனால் இந்த விற்பனை தீபாவளி அன்று 2 மடங்காக அதிகரித்து உள்ளது. மொத்தம் 5 ஆயிரத்து 302 பெட்டி பீர் பாட்டில்களும், 10 ஆயிரத்து 135 பெட்டி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மதுபான பாட்டில்களும் விற்று தீர்ந்துள்ளன.

கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அன்று ரூ.5 கோடியே 71 லட்சத்து 84 ஆயிரத்து 600-க்கு மதுவிற்பனை ஆனது. இந்த ஆண்டு ரூ.67 லட்சத்து 11 ஆயிரத்து 935-க்கு கூடுதலாக மதுவிற்பனை ஆகி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஈரோடு மாவட்டத்தில் அமைச்சர்-எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுப்போட்டனர் கலெக்டர் ஈரோட்டில் வாக்குப்பதிவு செய்தார்
ஈரோடு மாவட்டத்தில் அமைச்சர்-எம்.எல்.ஏக்கள் ஓட்டுப்போட்டனர். ஈரோட்டில் கலெக்டர் கதிரவன் வாக்குப்பதிவு செய்தார்.