தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கமல்ஹாசன் 2 நாட்கள் சுற்றுப்பயணம்


தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கமல்ஹாசன் 2 நாட்கள் சுற்றுப்பயணம்
x
தினத்தந்தி 7 Nov 2018 10:45 PM GMT (Updated: 7 Nov 2018 9:35 PM GMT)

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கமல்ஹாசன் நாளை (வெள்ளிக்கிழமை) நாளை மறுநாள் (சனிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்கள் நீதி மய்ய கூட்டங்களில் பேசுகிறார்.

தர்மபுரி,

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நாளை (வெள்ளிக்கிழமை) நாளை மறுநாள் (சனிக் கிழமை) ஆகிய 2 நாட்கள் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். நாளை மதியம் 3.30 மணிக்கு நல்லம்பள்ளியிலும், 4.30 மணிக்கு பாப்பாரப்பட்டியிலும், 5.30 மணிக்கு பாலக்கோட்டிலும், 6.30 மணிக்கு காரிமங்கலத்திலும், இரவு 7 மணிக்கு பெரியாம்பட்டியிலும் நடைபெறும் கூட்டங்களில் வேனில் நின்றபடி பேசுகிறார்.

இதைத்தொடர்ந்து இரவு 8 மணிக்கு தர்மபுரி வள்ளலார் திடலில் நடைபெறும் மக்கள் நீதி மய்யம் பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் பேசுகிறார். நாளை மறுநாள் பிற்பகல் 3.30 மணிக்கு அரூர் ரவுண்டானாவிலும், மாலை 4.30 மணிக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ரவுண்டானாவிலும், மாலை 5 மணிக்கு மத்தூரிலும், 6 மணிக்கு பர்கூரிலும், 6.30 மணிக்கு கிருஷ்ணகிரியிலும் பேசுகிறார். பின்னர் இரவு 7.30 மணிக்கு ராயக்கோட்டையிலும், 8.30 மணிக்கு ஓசூரிலும் வேன் மூலம் மக்களை சந்தித்து பேசுகிறார்.

இதுதொடர்பாக மக்கள் நீதிமய்யம் கட்சியின் தர்மபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி மண்டல பொறுப்பாளரும், மாநில செயற்குழு உறுப்பினருமான வக்கீல் டி.ராஜசேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மக்களுடனான பயணம் என்ற நோக்கத்துடன் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் மக்களை நேரில் சந்தித்து பேசுகிறார். இந்த கூட்டங்களில் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், விவசாயிகள், வணிகர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.

Next Story