நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி 20 தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதி சித்தராமையா பேட்டி


நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி 20 தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதி சித்தராமையா பேட்டி
x
தினத்தந்தி 7 Nov 2018 11:00 PM GMT (Updated: 7 Nov 2018 9:37 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி 20 தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதி என்று சித்தராமையா கூறினார்.

பெங்களூரு, 

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி 20 தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதி என்று சித்தராமையா கூறினார்.

கர்நாடக இடைத்தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியின் வெற்றி குறித்து முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா பெங்களூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தாக்கத்தை ஏற்படுத்தும்

தேர்தல் பிரசாரத்தின்போது, காங்கிரஸ் வேட்பாளர் உக்ரப்பா 2 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று நான் கூறினேன். அதே போல் ஜமகண்டி தொகுதியில் 50 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி கிடைக்கும் என்று நான் சொன்னேன். ஏறக்குறைய அதே போல் எங்கள் கட்சி வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற்றுள்ளனர்.

மக்களின் மனநிலையை நான் சரியாக கணித்துள்ளேன் என்பதில் பெருமை கொள்கிறேன். இந்த இடைத்தேர்தல் முடிவு, அடுத்து வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும். மக்களின் மனநிலை பா.ஜனதாவுக்கு எதிராக உள்ளது என்பதை இதன் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது.

பா.ஜனதாவுக்கு கொள்கை கிடையாது

காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) புனிதமற்ற கூட்டணியை அமைத்துக்கொண்டதாக பா.ஜனதா தொடர்ந்து கூறியது. காங்கிரஸ் எம்.எல்.சி.யின் மகனை பா.ஜனதாவுக்கு அழைத்து சென்றது புனிதமானதா?. பா.ஜனதாவுக்கு கொள்கை கிடையாது. ஆட்சி அதிகாரத்திற்காக அந்த கட்சியினர் எதை வேண்டுமானாலும் செய்வார்கள்.

நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளில், 20 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறுவது உறுதி.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

Next Story