இடைத்தேர்தலில் அதிகாரம், பண பலத்தால் கூட்டணி ஆட்சி வெற்றி பெற்றுள்ளது எடியூரப்பா சொல்கிறார்


இடைத்தேர்தலில் அதிகாரம், பண பலத்தால் கூட்டணி ஆட்சி வெற்றி பெற்றுள்ளது எடியூரப்பா சொல்கிறார்
x
தினத்தந்தி 7 Nov 2018 11:00 PM GMT (Updated: 7 Nov 2018 9:42 PM GMT)

இடைத்தேர்தலில் அதிகாரம், பண பலத்தால் கூட்டணி ஆட்சி வெற்றி பெற்றுள்ளது என்று எடியூரப்பா கருத்து தெரிவித்துள்ளார்.

சிவமொக்கா, 

இடைத்தேர்தலில் அதிகாரம், பண பலத்தால் கூட்டணி ஆட்சி வெற்றி பெற்றுள்ளது என்று எடியூரப்பா கருத்து தெரிவித்துள்ளார்.

இடைத்தேர்தல் முடிவு

சிவமொக்கா நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜனதா வேட்பாளர் ராகவேந்திரா 52 ஆயிரத்து 148 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிக்கனியை பறித்தார். ஆனால் மண்டியா, பல்லாரி, ராமநகர், ஜமகண்டி தொகுதிகளில் பா.ஜனதா படுதோல்வியை சந்தித்தது.

இந்த இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா நிருபர் களிடம் கூறியதாவது:-

5 தொகுதிக்கான இடைத்தேர்தலில் சிவமொக்கா நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் ராகவேந்திரா வெற்றி பெற்றுள்ளார். இது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் பல்லாரி நாடாளுமன்ற தொகுதி, ஜமகண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜனதா வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது. நாங்கள் எதிர்பார்க்காத முடிவு இதுவாகும். அதுபோல் மண்டியா நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் 2,40,000 ஓட்டுகள் பெற்றுள்ளார். இந்த தொகுதியில் ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு நாங்கள் கிலி கொடுத்துள்ளோம்.

இந்த இடைத்தேர்தலில் கூட்டணி ஆட்சி அதிகாரம், பண பலத்தால் வெற்றி பெற்றுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பா.ஜனதாவின் கோட்டை

இதைதொடர்ந்து இடைத்தேர்தலுக்கு பின்னர் கூட்டணி ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று கூறினீர்களே? என நிருபர்கள் எடியூரப்பாவிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளித்து கூறிய தாவது:-

மந்திரிசபை விரிவாக்கத்திற்கு பிறகு நிச்சயமாக இந்த கூட்டணி ஆட்சி கவிழும். அப்பா, மகன், முன்னாள் முதல்-மந்திரி ஆகியோர் பிரசாரம் செய்தும் ஜனதாதளம் (எஸ்) வேட்பாளர் வெற்றி பெற முடியவில்லை. சிவமொக்கா எப்போதும் பா.ஜனதாவின் கோட்டை தான். அதை தற்போது நிரூபித்து காட்டியுள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story