மாவட்ட செய்திகள்

டோங்கிரி சீர்திருத்த பள்ளியில் இருந்து 3 சிறுமிகள் தப்பி ஓட்டம்பெற்றோர் அனுமதிக்க மறுத்ததால் ஒருவர் போலீசில் சரண் + "||" + From Dongeri Reform School 3 girls fled away

டோங்கிரி சீர்திருத்த பள்ளியில் இருந்து 3 சிறுமிகள் தப்பி ஓட்டம்பெற்றோர் அனுமதிக்க மறுத்ததால் ஒருவர் போலீசில் சரண்

டோங்கிரி சீர்திருத்த பள்ளியில் இருந்து 3 சிறுமிகள் தப்பி ஓட்டம்பெற்றோர் அனுமதிக்க மறுத்ததால் ஒருவர் போலீசில் சரண்
டோங்கிரி சீர்திருத்த பள்ளியில் இருந்து 3 சிறுமிகள் தப்பி ஓடினர். இதில் பெற்றோர் வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்ததால் ஒரு சிறுமி போலீசில் சரண் அடைந்தாள்.
மும்பை, 

டோங்கிரி சீர்திருத்த பள்ளியில் இருந்து 3 சிறுமிகள் தப்பி ஓடினர். இதில் பெற்றோர் வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்ததால் ஒரு சிறுமி போலீசில் சரண் அடைந்தாள்.

3 சிறுமிகள் தப்பி ஓட்டம்

மும்பையில் குற்றசம்பவங்களில் ஈடுபடும் சிறுவர், சிறுமியினர் டோங்கிரியில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், சம்பவத்தன்று சீர்திருத்த பள்ளியில் இருந்த போரிவிலி, பீகார், தமிழ்நாட்டை சேர்ந்த 3 சிறுமிகள் இரண்டு மேைஜகைள் மற்றும் ஒரு ஏணியை பயன்படுத்தி, ஏறி குதித்து தப்பி ஓடி விட்டனர்.

இதை அறிந்த சீர்திருத்த பள்ளி அதிகாரி ஜாதவ் சக்பால் அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் இதுபற்றி டோங்கிரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமிகள் 3 பேரையும் வலைவீசி தேடினர்.

போலீசில் சரண்

இந்த நிலையில், தப்பி சென்ற போரிவிலியை சேர்ந்த சிறுமி தனது வீட்டிற்கு சென்றிருக்கிறாள். ஆனால் பெற்றோர் அவளை வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்து விட்டனர். அவள் தப்பி ஓடி வந்ததை அறிந்து கோபம் அடைந்த அவர்கள் உடனே இங்கிருந்து சென்று விடும்படி சத்தம் போட்டு உள்ளனர்.

இதனால் மனமுடைந்த சிறுமி அங்குள்ள போலீஸ் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்தாள். விசாரணையில், அவள் தீபாவளி பண்டிகையை கொண்டாட ஆசைப்பட்டு தப்பித்து வந்ததாக கூறினாள். பின்னர் அவள் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டாள். தப்பியோடிய மற்ற 2 சிறுமிகளையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.