லாட்டரி கடையில் கொள்ளையடித்தவருக்கு 7 ஆண்டு ஜெயில் செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு


லாட்டரி கடையில் கொள்ளையடித்தவருக்கு 7 ஆண்டு ஜெயில் செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 8 Nov 2018 4:30 AM IST (Updated: 8 Nov 2018 4:16 AM IST)
t-max-icont-min-icon

லாட்டரி கடையில் கொள்ளையடித்தவருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து செசன்ஸ் கோர்ட்டு உத்தரவிட்டது.

மும்பை, 

லாட்டரி கடையில் கொள்ளையடித்தவருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து செசன்ஸ் கோர்ட்டு உத்தரவிட்டது.

ரூ.2 லட்சம் கொள்ளை

மும்பை மலாடு பகுதியை சேர்ந்தவர் அம்ரிஷ். இவர் லாட்டரி கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த 2014-ம் ஆண்டு கடையில் இருந்த போது முகமூடி அணிந்து 2 பேர் உள்ளே நுழைந்தனர். பின்னர் துப்பாக்கியை காட்டி மிரட்டி கடையில் இருந்த ரூ.2 லட்சத்து 2 ஆயிரத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பி ஓடினர்.

இதுகுறித்து அம்ரிஷ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

7 ஆண்டு ஜெயில்

இதில் அவரது கடையில் கொள்ளையடித்தது முகேஷ் தேசாய், பிரேம்சிங் என்பது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார் அவர்கள் மீது செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது, பிரேம் சிங் உடல் நலம் சரியில்லாமல் உயிரிழந்தார்.

முகேஷ் தேசாய் மீதான விசாரணை நடந்து வந்தது. விசாரணை நிறைவில் அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து தீர்ப்பு கூறிய கோர்ட்டு, முகேஷ் தேசாய்க்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து உத்தரவிட்டது.

Next Story