களக்காடு அருகே தையல்காரர் கொலை: அண்ணன்-தம்பியை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு
களக்காடு அருகே தையல்காரர் கொலையில், தலைமறைவாக உள்ள அண்ணன், தம்பியை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
களக்காடு,
களக்காடு அருகே தையல்காரர் கொலையில், தலைமறைவாக உள்ள அண்ணன், தம்பியை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
தையல்காரர் கொலை
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள மேலகாடுவெட்டியை சேர்ந்தவர் ஆல்பர்ட் செல்வகுமார் (வயது 40). இவர் வள்ளியூரில் உள்ள தையல் கடையில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று அதே ஊரைச் சேர்ந்த மாயக்கண்ணன் என்பவரிடம், மணி மகன்கள் பொன் இசக்கி, அவருடைய தம்பி இசக்கிமுத்து ஆகிய இருவரும் குடிபோதையில் தகராறு செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த ஆல்பர்ட் செல்வகுமார் தட்டிக்கேட்டு தகராறை விலக்கி விட்டுள்ளார்.
பின்னர் இரவில் அண்ணன்-தம்பி இருவரும், ஆல்பர்ட் செல்வகுமாரை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அதே பகுதியில் உள்ள பச்சையாறு கரையில் ஆல்பர்ட் செல்வகுமார் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
3 தனிப்படைகள்
இதுகுறித்து களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பொன் இசக்கி, இசக்கிமுத்து ஆகிய இருவரும் சேர்ந்து ஆல்பர்ட் செல்வகுமாரை கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து அவர்களை பிடிக்க களக்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த தனிப்படையினர் தலைமறைவாக உள்ள 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story