மாவட்ட செய்திகள்

கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைத்தால் குடும்பத்துடன் கடலில் குதித்து தற்கொலை செய்வோம் + "||" + If we set up a quarry in the cobalt river, we will commit suicide by jumping into the sea with our family

கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைத்தால் குடும்பத்துடன் கடலில் குதித்து தற்கொலை செய்வோம்

கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைத்தால் குடும்பத்துடன் கடலில் குதித்து தற்கொலை செய்வோம்
கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைத்தால் குடும்பத்துடன் கடலில் குதித்து தற்கொலை செய்து கொள்வோம் என்று கிராம மக்கள், ஆய்வு குழுவினரிடம் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
திருவையாறு,

தஞ்சை மாவட்டம் திருவையாறை அடுத்த விளாங்குடியில் கொள்ளிடம் ஆறு உள்ளது இந்த ஆற்றில் மணல் குவாரி அமைக்க கூடாது என்று அப்பகுதி மக்கள் சார்பில் மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து கோர்ட்டு உத்தரவின் பேரில் ஐ.ஏ.எஸ். அதிகாரி அருண் தம்புராஜ் தலைமையில் அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் கணபதி சுப்ரமணியன், பேராசிரியர் புகழேந்தி ஆகியோர் கொள்ளிடம் ஆற்றுக்கு வந்து ஆய்வு செய்தனர்.


இதனால் அந்த பகுதியில் நேற்று காலை முதலே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து திருவையாறு போலீஸ் துணை சூப்பிரண்டு குலசேகரன், இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், சப்-இன்ஸ்பெக்டர் ஆர்த்தி ஆகியோர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஆய்விற்கு வந்த அதிகாரிகள், ஆற்றில் மணல் எடுக்கப்படும் இடத்தை முழுமையாக அளந்து ஆய்வு செய்தனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 100-க்கும் மேற்பட்டோர் அங்கு இருந்த அதிகாரி களிடம் தனித்தனியாக மனு அளித்து, மணல் குவாரி அமைக்க தங்களின் எதிர்பை தெரிவித்தனர்.

இங்கு மணல் குவாரி அமைக்கப்பட்டால் தங்களது வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்படும். குடிநீருக்கு கூட தண்ணீர் கிடைக்காது. விவசாய பம்புசெட்டுகளுக்கு தண்ணீர் கிடைக்காமல் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும். அருகில் உள்ள வனப்பகுதியில் உள்ள விலங்குகளும் தண்ணீர் இல்லாமல் பாதிக்கப்படும். எனவே இப்பகுதியில் மணல் குவாரி அமைக்கக் கூடாது என்று அந்த மனுவில் கூறியிருந்தனர்.

அனைத்து மனுக்களையும் பெற்றுக்கொண்ட ஆய்வு குழுவினர், இந்த மனுக்கள் குறித்து பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்தனர். ஆய்வின் போது பொதுப்பனித்துறை அதிகாரி ராமமூர்த்தி, திருவையாறு தாசில்தார் ராமசந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

மீண்டும் மணல்குவாரி அமைப்பதற்கு அரசு முற்பட்டால் எங்கள் கிராமத்தில் உள்ள அனைவரும் ரேசன் கார்டு, ஆதார் கார்டு, நிலம், வீட்டு பத்திரங்கள், பட்டாக்களையும் மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைத்து விட்டு அனைவரும் குடும்பத்துடன் கடலில் குதித்து தற்கொலை செய்து கொள்வோம் என்று கிராம மக்கள் கண்ணீருடன் ஆய்வு குழுவினரிடம் தெரிவித்தனர். 

தொடர்புடைய செய்திகள்

1. செயல்படாத நிர்வாகிகள் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் பேச்சு
வட்டார அளவில் பூத் கமிட்டி அமைக்காமல் செயல்படாத நிர்வாகிகள் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று ஆய்வு கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் பேசினார்.
2. பிறப்பு-இறப்புகளை 21 நாட்களுக்குள் இலவசமாக பதிவு செய்யலாம் மாவட்ட வருவாய் அதிகாரி தகவல்
பிறப்பு, இறப்புகளை 21 நாட்களுக்குள் இலவசமாக பதிவுசெய்யலாம் என கரூர் மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ் தெரிவித்து உள்ளார்.
3. நாகர்கோவிலில் சட்டமன்ற பொதுக்கணக்கு குழு ஆய்வு கூட்டம் துரைமுருகன் தலைமையில் நடந்தது
நாகர்கோவிலில் சட்டமன்ற பொதுக்கணக்கு குழு ஆய்வு கூட்டம் துரைமுருகன் தலைமையில் நடந்தது.
4. கஜா புயலால் வீடுகள் பாதிப்புக்கு நிவாரணமாக 64 ஆயிரத்து 58 பேரின் வங்கி கணக்கில் ரூ.32 கோடி செலுத்தப்பட்டுள்ளது
புதுக்கோட்டை மாவட்டத்தில் வீடுகள் பாதிக்கப்பட்ட 64 ஆயிரத்து 58 பேரின் வங்கி கணக்கில் ரூ.32 கோடி நிவாரணம் செலுத்தப்பட்டு உள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
5. தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றால் புகார் தெரிவிக்கலாம் கலெக்டர் சாந்தா தகவல்
தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் புகார் தெரிவிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் சாந்தா கூறினார்.