ஓட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தல்: அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வெற்றி பெறும் அமைச்சர் ராஜலட்சுமி பேச்சு
ஓட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்று அமைச்சர் ராஜலட்சுமி கூறினார்.
ஓட்டப்பிடாரம்,
ஓட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்று அமைச்சர் ராஜலட்சுமி கூறினார்.
ஆலோசனை கூட்டம்
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் புதியம்புத்தூரில் நடந்தது. மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளரும், தூத்துக்குடி மற்றும் நெல்லை ஆவின் நிறுவன தலைவருமான என்.சின்னத்துரை, முன்னாள் யூனியன் தலைவர் காமாட்சி என்ற காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் தர்மராஜ் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளரும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சருமான ராஜலட்சுமி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
அதிக வாக்குகள்
கூட்டத்தில் அமைச்சர் ராஜலட்சுமி பேசியதாவது:-
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஏழை மக்களுக்காக பல்வேறு திட்டங்களை தந்ததால் 2016 தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. ஓட்டப்பிடாரம் தொகுதி 2 லட்சத்து 20 ஆயிரம் வாக்காளர்களை கொண்டது. சங்கரன்கோவில் போன்று ஓட்டப்பிடாரத்தில் 7 முறை அ.தி.மு.க. வெற்றி பெற்று உள்ளது. கடந்த தேர்தலை விட ஓட்டப்பிடாரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வெற்றி பெறும்.
இவ்வாறு அமைச்சர் ராஜலட்சுமி கூறினார்.
அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசுகையில், ‘அ.தி.மு.க.வை ஒழித்து விட தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் பல்வேறு திட்டத்தை வகுத்து வருகிறது. அ.தி.மு.க.வை அடிமட்ட தொண்டர்கள் இருக்கும் வரை யாரும் ஒழிக்க முடியாது. இடைத்தேர்தல் எந்த சூழ்நிலையில் வரும் என்பது மக்களுக்கு தெரியும். ஆனால் சட்டமன்ற மக்களுக்கும் கழகத்துக்கும் துரோகம் செய்பவர்களை அம்மாவின் ஆத்மா சும்மா விடாது. இடைத்தேர்தலில் எதிரிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும்‘ என்றார்.
கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் தங்கமாரியம்மாள், ஓட்டப்பிடாரம் நகர செயலாளர் கொம்புமகராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக புதியம்புத்தூர் மெயின் பஜாரில் உள்ள எம்.ஜி.ஆர் உருவ சிலைக்கு அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ராஜலட்சுமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Related Tags :
Next Story