மாவட்ட செய்திகள்

திருக்கோவிலூர் அருகே: விவசாயியை கொன்ற தாய், மகன் கைது - 3 பேருக்கு வலைவீச்சு + "||" + Near Tirukovilur: The mother, the son who killed the farmer, was arrested - 3 people

திருக்கோவிலூர் அருகே: விவசாயியை கொன்ற தாய், மகன் கைது - 3 பேருக்கு வலைவீச்சு

திருக்கோவிலூர் அருகே: விவசாயியை கொன்ற தாய், மகன் கைது - 3 பேருக்கு வலைவீச்சு
திருக்கோவிலூர் அருகே விவசாயியை கொன்ற தாய், மகனை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.
திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர் அருகே உள்ள எடையூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம்(வயது 45). விவசாயி. இவருடைய நிலத்தில் அதே ஊரைச்சேர்ந்த மேகவர்ணன்(45) என்பவர் ஏர் உழுத வகையில் ஆறுமுகம் ரூ.300 கொடுக்க வேண்டியது இருந்தது.

இந்த பணத்தை மேகவர்ணன் குடும்பத்தினர் நேற்று முன்தினம் கேட்டனர். இதனால் ஆறுமுகத்துக்கும், மேகவர்ணன் குடும்பத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மேகவர்ணன் குடும்பத்தினர் தடி மற்றும் இரும்பு கம்பியால் தாக்கி ஆறுமுகத்தை கொலை செய்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேகவர்ணன், இவருடைய மனைவி நிர்மலா, உறவினர் கிருஷ்ணவேணி, மேகவர்ணனின் மருமகன் ராமதாசு, ராமதாசின் தாய் ராணி(45) ஆகியோரை தேடி வந்தனர். இந்த நிலையில் வீட்டில் பதுங்கி இருந்த ராமதாசு, ராணி ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மற்ற 3 பேரையும் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பொம்மிடி அருகே மகளை கிணற்றில் தள்ளி கொன்று தாய் தற்கொலை
பொம்மிடி அருகே மகளை கிணற்றில் தள்ளி கொன்று விட்டு, தாயும் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
2. பெரம்பலூரில் குழந்தையை கொன்று கடத்தல் நாடகமாடிய தாய் கைது பரபரப்பு தகவல்கள்
பெரம்பலூரில் குழந்தையை கொன்று கடத்தல் நாடகமாடிய தாயை போலீசார் கைது செய்தனர்.
3. புனேயில் வீடு புகுந்து பெண்ணை சுட்டுக்கொன்ற தந்தை, மகன் கைது கூலிப்படையை சேர்ந்தவர்கள்
புனேயில் வீடு புகுந்து பெண்ணை சுட்டுக்கொன்ற தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர். இருவரும் கூலிப்படையினர் என்பது தெரியவந்தது.
4. சுங்குவார்சத்திரம் அருகே தாய், மகள் தூக்குப்போட்டு தற்கொலை
சுங்குவார்சத்திரம் அருகே தாய், மகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
5. போளூரில் பரிதாபம்: அரசு பஸ் மோதி தாய்-மகன் பலி
போளூரில் மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதி தாய், மகன் பரிதாபமாக இறந்தனர்.